பிரச்சனைகள் குறித்து மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரின் கவனத்திற்கு கொண்டு சென்ற சாணக்கியன்!

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அதிவந்.ஜோசப் பொன்னையா ஆண்டகையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார்.

ஆயர் இல்லத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 இதன்போது 69வது பிறந்தநாளினை கொண்டாடிய ஆயர் பேரருட்தந்தை அதிவந்.ஜோசப் பொன்னையா ஆண்டகைக்கு, இரா.சாணக்கியன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சில பல விடயங்கள் தொடர்பிலும் இரா.சாணக்கியன் இதன்போது தெளிவுபடுத்தியிருந்தார்.

குறிப்பாக விவசாயிகளின் பசளை பிரச்சனை, காணி அபகரிப்பு, சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் மண் அகழ்வு போன்ற விடயங்களை ஜனாதிபதி, பிரதமர் போன்றோருக்கு எமது பொதுமக்கள் சார்பாக தெரியப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை இரா.சாணக்கியன் முன்வைத்திருந்தார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதகுறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இரா.சாணக்கியனின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் விரைவாக தெரியப்படுத்துவதாகவும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அதிவந்.ஜோசப் பொன்னையா ஆண்டகை குறிப்பிட்டிருந்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares