பிரதான செய்திகள்

“பிக் பாஸ்” நிகழ்ச்சி ப்ளுவேல்லாக மாறும் நிலை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர வர கொடுக்கப்படும் டாஸ்குகள் கொடூரமாக உள்ளன.

இவர்களின் டாஸ்க் பெரும்பாலும் மற்றவர்களையோ அல்லது அதே போட்டியாளரையோ காயப்படுத்தும் வகையிலேயே உள்ளது, இவர்கள் கூறும் கருத்து வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எதிர்மறை கருத்தை உணர்த்தும் வகையில் உள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ப்ளூவேல் விளையாட்டுக்கு இணையாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, உடல் முழுவதும் கிளிப் போட்டு கொள்ள வேண்டும், கடலை மாவை பூசி கொண்டு பேய் போல திரிய வேண்டும், சட்டைகளை கிழித்து கொண்டு பைத்தியக்காரனாக திரிய வேண்டும் என்றெல்லாம் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இது போன்ற டாஸ்குகள் பார்க்கும் பார்வையாளர்களை ரசிக்க வைக்கவில்லை, முகங்களை தான் சுளிக்க வைக்கிறது என்பது எப்போது தான் நிகழ்ச்சி குழுவினருக்கு புரியும் என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகிறன்றனர்.

Related posts

மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

Editor

யோஷிதவுக்குப் பிணை

wpengine

“இனவாதத்தையும் மத வாதத்தையும் தூண்டும் காவிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்”

wpengine