பா.உ யோகஸ்வரனின் இனத்துவேச,கொந்தளிப்பும் –முஸ்லிகளின் சந்தேகங்களும்.

தமிழ் முஸ்லிம்களின் உறவுகளை  பொறுத்த வரையில் மதத்தால் மட்டும்  வேறுபட்டாலும் ஒரே பொளதீக சூழலில் பல்வேறு பட்ட விடயங்களில் பின்னி பிணைந்து ஒரு தாய் பிள்ளைகள் போன்று இரண்டு இனங்களுக்கிடையிலான உறவுகள் காணப்படுகின்றன.

1985 முன்னர் தமிழ் தலைவர்கள் தங்களது அரசி்ல் பயனத்தில் முஸ்லிம்களையும் சேர்த்தே பயனித்தார்கள்  தமிழரசு கட்சி யின் பாசறையில் தந்தை செல்வாவின் வழிகாட்டலில் பெரிய மரமாக விருட்சமடைந்து அதன் மூலம் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக விழிபடையவைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு தனியான அரசியல் கட்சியை இஸ்தாபித்த மாமனிதர் மர்ஹும்.எம்.எச்.எம்.அஸ்ரப் ,செனட்டர் மசூர் மொளலான  போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் அரசியல் ஆசான்கள் தமிழ் சகோதர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த  தேர்தல் கால வரலாற்றில் மட்டகளப்பு கல்குடா தொகுதியை எடுத்து கொண்டால் அங்கு வாழும் ஒட்டமாவடி ,வாழைசேனை போண்ற பிரதேச முஸ்லிகள் அன்று தமிழரசு கட்சியில் போட்டியிட்ட தேவ நாயகம் ஐயா அவர்களை ஆதரித்து அவரின் வெற்றிக்கு பாடுபட்டு அவரை பாராளுமண்ற ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்த வரலாற்றை யாரும் மறைக்க முடியாது..

த.தே.கூ அமைப்புக்கும் முஸ்லிம் காங்கிறசுக்கும் இடையில் காணப்படும் நல்லுறவால் தற்போதைய கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கு  விட்டு கொடுப்புடன் ஆதரவளித்து முஸ்லிம்காங்கிரஸ் சார்பாக  ஒரு வரை முதலமைச்சராக்கி  முஸ்லிம் காங்கிரசை திருப்தியடைய வைத்தது  தமிழ் , முஸ்லிம்  இணக்க அரசியலை காட்டுகின்றது.

மதிப்புக்கும் மரியாதைக்க்குரியவர்களான  சம்மந்தன் ஐயா ,மற்றும் மாவைசேனாதிராஜா போண்ற மாபெரும் தலைவர்ளின் தற்கால பேச்சுக்களும் நடைமுறைகளூம் முஸ்லிம்கள் மத்தியில் காணப்பட்ட சந்தேகங்களை களைந்து கடந்த காலம் போன்று முஸ்லிகளும் அவர்களின் தலைமையின் கீழ் பயணிக்க வேண்டிய காலம் வெகு தூரமில்லை என்ற நம்பிக்கையும் முஸ்லிம்கள் மத்தியில் உருவாகிவருகின்றது.

அரசியல் கட்சி என்பது ஒரு மதமும் அல்ல ஒரு மார்க்கமும் அல்ல  மக்களின் தேவைகளையும்  அபிவிருத்திகளையும் ,நியாயங்களையும் பெற்றுக்கொடுக்கும்  ஒரு இயக்கம் . அமைச்சரோ அல்லது ஒரு பாராளுமன்ற பிரதி நிதியோ ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல மக்கள் பிரதி என்பவர் குறிப்பாக அவரின் மாவட்டத்தில் இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் தனக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்ற கருதுக்கு அப்பால் எல்லாமக்ளுக்கும் சேவை செய்பவர்தான் உன்மையான மக்கள் பிரதி நிதி  பிரதி அமைச்சர்  அமிர் அலி அவர்கள் முஸ்லிம் காங்கிரசில்  மக்கள் பிரதி நிதியாக இருந்தும் மக்களுக்கு எவ்வித சேவையும் அபிவிருத்தியையும் கொடுக்க முடியாத காரணத்தால் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். .கடந்த தேர்தலில் அமிர் அலி அவர்களை  தோல்வியடைய வைப்பதற்க்காக  முஸ்லிம் காங்கிறஸ் மூண்று பெரும் சக்திகளான அலிசாகிர் மவ்லான , பி. எம். ஜி . ஜி .மற்றும் இன குரோத்த்தை நிகழ்ச்சி கொண்டு அலையும் போலி சாமிகளுடன் கூட்டு சேர்ந்து கோடிக்கணக்கான பணங்களை செலவு செய்து அமிர் அலி என்ற சக்தியை தோல்வியடை செய்ய முடியவில்லை.  மட்டகளப்பு மாவட்டத்தில் முஸ்லிம் சார்பாக கூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர் பிரதி அமைச்சர் அமிர் அலி ஆகும் . அவரின் சொந்த ஊர் மக்களால்   80 % மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டது குறிப்பிட்தக்கது.

இந்த நாட்டில் இன்று இனவாத கட்சிகளும் ,மதவாத அமைப்புகளும் ,இனத்துவேச கோசங்களும் மலிந்து கிடக்கின்ற சூழலில் பிரதி அமைச்சர் அமிர் அலி அவர்கள்  தமிழ் முஸ்லிம் சமுகத்தின் உறவை கட்டி எழுப்பும் நோக்கில் தான் ஒரு உன்மையான மக்கள் பிரதி நிதி என்ற தூய எண்னத்துடன்  இன ,மத ,  வேறுபாடு பாராது மக்களின் தேவைகளை அறிந்து தன்னால் இயன்றளவு சேவையை  தனது மாவட்ட மக்களுக்கு செய்து கொண்டிருக்கிண்றார்  என்பதனை ஒவ்வொரு சகோதர தமிழ் கிராமங்களிலும்அவரால் கொண்டுவரப்பட்ட சேவைகள் பறைசாற்றி கொண்டிருகின்றத்து.

கடந்த நல்லாட்சி காலத்தில் அரசியல்வாதிகளின் நெருக்குவாரத்துக்கு மத்தியில் பிரதி அமைச்சர் அமிர் அலி அவர்களால் பட்டிருப்பு தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகள்

1.செட்டிபாளையத்தில் வாவி மீனவர் தங்குமிட கட்டிடம்
2.வெல்லாவளி வீவேகானந்தபுர கருங்கல்  தொழிலாளர்களுக்கு  இயந்திரசாதனங்கள்
3.களுவான்சிகுடி பஸ்தரிப்பு நிலையத்துக்கான கட்டிட தொகுதி
4.களுவான்சிகுடி தபாலகத்துக்கு புதி கட்டிடத்தை பெற்று கொள்ள நடவடிக்கை
5.வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் சுமார் 2700 உதவி
6.பட்டிருப்பு  விக்னேஸ்வரா பாலர் பாடசாலைக்கான நிரந்தர கட்டிடம்
7.களுதாவளை வெற்றிலை பயிர்செய்கியாளர்களுகான உதவிகள்
8.சுமார் 70 குடும்பங்களுக்கு நெசவு கைத்தறியும் உபகரணங்கள்
9.சுமார் 45 யுவதிகளுக்கு தையல் இயந்திரம்
10.லங்கா சத்தோச மொத்த விற்பானை நிலயம்
11.தங்க நகை வடிவமைப்பாளர்கள் சுமார் 200 பேருக்கு வாழ்வாதார உதவிகள்
12.துறைநீலாவனையில் இரண்டு  வீதிகளும் ,வடிகான் வசதிகளும்
13.களுவான்சிகுடியில் இரண்டு  வீதி அபிவிருத்தி
14.பழுகாம்மத்தில்  வீதி அபிவிருத்தி ,
15. தேவஸ்தானத்துக்கு தளபாடங்கள்
16.ஆறு விழையாட்டு கழகங்களுக்கு விழையாட்டு உபகரணங்கள்
18.களுவான்சிகுடி சாய் பாடசாலைக்கு வேண்ட் வாத்தியம்
19.களுவான்சிகுடி சரஸ்வதி வித்தியாலத்துக்கு  விழையாட்டு மைதான அபிவிருத்தி
20.பனிரண்டு கோவில்களுக்கு கட்டுமான உதவி

இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு 18 மாதங்களில்  கொளரவ பிரதி அமைச்சர் அமிர அலி அவர்களின் இன ,மத ,பேதம் கடந்த மக்கள் சேவையை சகித்து கொள்ள முடியாமல் தனது செல்வாக்கை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தினால் கொளரவ பாரளுமணற உறுப்பினர் சீ,யோகஸ்வரன் அவர்கள்   இன,குரோத,கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதை தனது நிகழ்ச்சி நிரலாக கொண்டுள்ளார். பிரதி அமைச்சருக்கு எதிராக பொய்களையும் ,கட்டுகதைகளையும் கட்டவிழ்து அப்பாவி மக்களை இன ரீதியாக உணர்ச்சி வசப்படுத்தி மக்களை பிழையாக  வழி நடத்தி அதன் மூலம் மீண்டும் இனங்களுக்குடையே முரண்பாடுகளை வளர்த்து தனது வருமானங்களை மேலும் இலகுவாக அதிகரித்து கொள்ள  எத்தனிக்கின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால நடைமுறை விடயங்களிலும் ,பேச்சுக்களிலும் ஏற்பட்ட நம்பிக்கை யோகஸ்வரன் போனறோர்களின் உன்மைக்கு புறம்பான கீழ்தரமான இன,குரோத பிரச்சாரங்களால் முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுதுகின்றது
மர்ஹும் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிறசின்  தளபதியாகயிருந்து  போது அந்த கட்சியையும் கொள்கைய்யும் ஏற்று கொள்ள முடியாத  இடது சாரி கட்சிகளும் ,ஆயுத குழுக்களும் ,இன்றைய மு,கா.முக்கிய போராளிகளும் ,தலைவரையும் போரளிகளையும் ,அழிப்பதற்க்கு அலைந்த போது பெரும் தலைவர் மரணத்தை உணர்ந்து கையில் கபன் சீலையுடன் அலைந்த வரலாற்ரை மறக்கமுடியாது.

மர்ஹும் மாவீர்ர் அஸ்ரப் அவர்கள் அவர் சார்ந்த சமுகத்துக்கு உன்மையாக உழைத்த்தால் அவரையும் அவருடன் இருந்த சில போராளிகளையும் ,கொள்கைகளையும் அழித்துவிட்டார்கள்.
அன்று தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு ஏற்பட்டது  போன்று ,  இன்று , அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் தலமைக்கும்  தவிசாளருக்கும் , எதிராக நளுக்கு நாள் சதி திட்டங்களும் ,கட்டு கதைகளும்,  இனவாத அமைப்புகளாலும் மதவாத குழுக்களுக்களாலும் , இனக்குரோத தேரர்களாலும் ,இன துவேசத்தை விதைத்து வரும் போலி சாமிகளாலும்  பல முனையிலிருந்து அரங்கேறிகொண்டுயிருக்கின்றன.

இந்த நல்லாட்சி காலத்தில்   மக்களின் சுயாதீன  சிந்தனையை , ஜனநாயக உரிமையை  நசுக்கும்  , நல்லாட்சிக்கு எதிராக இனவாதம் பேசி பிளைப்பு நடத்தும் ,போலி வேடதாரிகளுக்கும் ,சமுகத்தை விற்று சுகபோக வாழ்க்கை நடத்தும்  அரசியல் வியாபாரிகளுக்கும்  தகுந்த பாடம் புகட்டி  தமிழ் முஸ்லிம் உறவை பாதுகாத்து தமிழ் பேசும் சமுகங்களின் இலட்சியத்தை வெற்றிகொள்ள இரு சமுகங்களும் ஒன்றாக சேர்ந்து பயனிக்க புறப்படுவோம்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares