செய்திகள்பிரதான செய்திகள்

பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சந்தையில் மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (05) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் தேங்காய் எண்ணெய் குறித்து தெரிவித்த விடயத்துக்கு விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கு வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, சில தேங்காய் எண்ணெய் இறக்குமதியார்கள் குறிப்பிட்டளவு வருமானத்தை ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயல்பாட்டை நிறுத்தியுள்ளனர். இவ்வாறானவர்களை தண்டிக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும். எனவே, மோசடிகளைத் தடுக்க உறுதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிங்கள மக்களுக்கு மஹிந்த வீரன்! பிரபாகரனுக்கு நினைவு தூபி பிரச்சினை இல்லை

wpengine

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு! அமைச்சர் றிசாட்

wpengine

ஒரு ரூபாவைக் கூட நீங்கள் எம்மிடம் கோரவில்லை! அஃனாப்பின் தாய் கண்ணீர்

wpengine