பிரதான செய்திகள்

பால்மா கிலோ ஒன்றின் விலை 80 ரூபாவினால் அதிகரிப்பு

குழந்தைகள் பால்மா தவிர்த்து ஏனைய அனைத்து பால்மா கிலோ ஒன்றின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கியள்ளது என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் டீ. ஜீவானந்த தெரிவித்தார்.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக இலங்கையில் அதன் விலையை அதிகரிக்க வேண்டும் என பால்மாவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் வைத்த கோரிக்கையை வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் நுகர்வோர் அதிகார சபை முன்வைத்தது.

குறித் கோரிக்கையை ஆராய்ந்த வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு குழந்தைகள் பால்மா தவிர்த்து ஏனைய அனைத்து பால்மாக்களின் கிலோ கிராம் ஒன்றின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்க அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் வாரங்களில் வெளியிட முடியும் என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இவ்வாரம் அவசரமாக கூடுகிறது மு.கா

wpengine

டுவிட்டரில் புதிய வசதி!

wpengine

மன்னாரில் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை வழங்கிய சஜித், முன்னால் அமைச்சர்

wpengine