செய்திகள்பிரதான செய்திகள்

பால்மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலையும் அதிகரிப்பு…!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால் , பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார்.

அதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒரு கோப்பை தேநீரின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு , அதன் புதிய விலை 1,100 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts

மன்னார் சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் சடலம்

wpengine

அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளை ஏற்று கரையோரப் பாதுகாப்புப் பிரதிப்பணிப்பாளர் ஒலுவில் பகுதியில்

wpengine

வவுனியா மடுவத்தில் பிரதேச தேவையைவிட கொழும்புக்கு இறைச்சி அனுப்புவதற்கே அதிக மாடுகள் அறுப்பு!!!

Maash