உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு ஆண்மை நீக்கம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மதுரை மாவட்டம் கீரைத்துறையில், 15 வயது தனது மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 இலட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், நாகரீகமான சமுதாயத்தில், பெற்ற மகளையே தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயல் மிகவும் கேவலமானது என்றும், இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க அதிகபட்சமாக மரணதண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குற்றவாளியின் செயலுக்கு குடிபோதையும் ஒரு காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். மதுவிலக்கு கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாத நிலையில் இருப்பதாகவும், இதை ஊடகங்களும், பத்திரிகைகளும் விவாதப் பொருளாக்கி சட்டம் இயற்றும் அமைப்புகளிடம் கொண்டு சேர்ப்பதை தங்கள் பொறுப்பாகவும், கடமையாகவும் நினைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுவதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts

207 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்

wpengine

ஜாகீர் நாயக்கை தீவிரவாதியாக உலகிற்கு சித்தரிக்க முயலும் மோடி அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

wpengine

சோமவன்ச அமரசிங்க காலமானார்

wpengine