பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம் மற்றும் மரண தண்டனை : அதிரடி சட்டம்

குழந்தைகள் மற்றும் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காம வெறியர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்னும் சட்டத்திற்கு இந்தோனேசியா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த மாதம், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஒரு 14 வயது சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, கொடூரமாக கொலை செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், இந்தோனேசியா மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே, குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, அந்நாட்டு அதிபர் ஜோகோ ஒரு புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது, அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, வேதிப்பொருட்கள் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

அதேபோல், அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு தண்டனை என்பதை மாற்றி 20 ஆண்டுகால சிறை தண்டனை அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares