Breaking
Fri. Dec 27th, 2024

பிரான்சில் பெண்மணி ஒருவர் பொருளாதார அமைச்சர் Emmanuel Macron – க்கு பாலியல் உணர்வை தூண்டும் புகைப்படங்கள் மற்றும் தவறான குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் பயிலும் மாணவியான அவருக்கு வயது 29 ஆகும், இவர் கடந்த மாதங்களாக பொருளாதார அமைச்சரின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு, பாலியல் உணர்வை தூண்டும் புகைப்படங்கள் மற்றும் தவறான குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பிய வண்ணம் இருந்துள்ளார்.

இவை, அமைச்சரின் மன அமைதியை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது, இதனைத் தொடர்ந்த அப்பெண்ணை நேற்று கைது செய்த பொலிசார், அவரை விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஊடகம் ஒன்று கூறியுள்ளதாவது, அப்பெண் மனநல பரீட்சை எழுதுவதற்கு தன்னை தயார்படுத்த வேண்டும் என்றும் தனது ஈர்ப்பினை அமைச்சருக்கு தெரியப்படுத்தினால், கிடைக்கும் முடிவினை வைத்து பாலியல் தொல்லைக்கு முயற்சிக்கலாம் என்பதே அப்பெண்ணின் நோக்கமாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளது.

பிரான்சில் நடைபெற்ற இணைய தொழில்முனைவோர் மாநாடு மூலமாக அப்பெண், பொருளாதார அமைச்சரின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பெற்றிருக்க கூடும், ஏனெனில் இந்த மாநாட்டிற்கு பிறகு, இதில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு அமைச்சர் தனது தனிப்பட்ட மின்னஞ்லை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *