பாலாவி எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரத்த தான முகாம்

(அபூ முஸ்னா)

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி நாகவல்லு பிரதேசத்தில் மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தில் இயங்கும் “ஐகோனிக் பிரண்ட்ஸ் அசோசியேசன்” என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரத்த தான முகாம் வரும் ஞாயிறுக்கிழமை (03-04-2016)  காலை 7.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பாலாவி எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

மனிதனை வாழ வைக்கும் மனித நேயப் பணிகளுள் இன்று முதன்மை இடத்தில் இருப்பது உயிர் பிழைக்கப் போராடும் மனிதனுக்கு இரத்த தானம் மூலம் உதவிக் கரம் நீட்டுவதாகும். எனவே இந்த உன்னத நோக்கத்தைக் கருத்திற்கொண்டு இந்த மாபெரும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளதாக “ஐகோனிக் பிரண்ட்ஸ் அசோசியேசன்”  என்ற அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த இரத்த தான முகாமில் பெண்களும் இரத்த தானம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு புத்தளம் மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளின் இரத்த வங்கி வைத்தியர்களின் பங்களிப்புடன் இந்த இரத்த தான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த உன்னத பணியில் கலந்து கொண்டு மனித நேயத்தை வார்த்தைகளில் மட்டுமின்றி இரத்த தானத்திலும் வெளிப்படுத்தவும், இன, மத, மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளைத் தாண்டி மனித நேயத்தைக் காக்க  முன்வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் இவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares