பாலஸ்தீனத்தில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை – இஸ்ரேலிய காவல்துறை

இஸ்ரேலிய வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்திருக்கிறது.

எப்ரோன் நகரில் உள்ள பேட்ரியார்க் குகைக்கு அருகில் 17 வயதான சிறுவனை எல்லைப் படையினர் சுட்டனர்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதியில் தெருக்களில் தினமும் தாக்குதல் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

ஒக்டோபர் மாதத்திலிருந்து  இம்மாதிரி தாக்குதல்களில் சுமார் 190 பாலஸ்தீனியர்களும் 28 இஸ்ரேலியர்களும் 2 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares