பிரதான செய்திகள்

பாலமுனையில் வாங்கிகட்டிய அமைச்சர் ஹக்கீம்.

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

கடந்த 01.09.2016ம் திகதி வியாழக்கிழமை திகதி மு.காவினர் பாலமுனைக்கு படை எடுத்திருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் பாலமுனைக்குள் வரக் கூடாதென கலைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்சில் அணியினர் மு.காவினரை இடை மறித்து தடுக்க முயன்றுள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் குறிக்கிட்டு இப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.இதன் பின்னர் அமைச்சர் ஹக்கீம் அனைவருக்கும் மிகக் கடுமையாக ஏசியுள்ளார்.இப் பிரச்சனையின் போது மிகவும் காரசாரமான வார்த்தை பிரயோகங்கள் எழுந்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

அண்மையில் மு.காவின் உயர் பீட உறுப்பினர் எஹியாக்கான் அம்பாறை மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் சேவை செய்வதில்லை என குற்றம் சாட்டியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க பரிந்துரை!

Editor

அமைச்சர் றிஷாட் விடயத்தில் சாய்ந்தமருது மக்களின் மெத்தப்போக்கு

wpengine

பேஸ்புக் காதல் முறிவு! அதிரடிபடை வீரர் தற்கொலை

wpengine