பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியின் பெருநாள் வாழ்த்து!

(கரீம் ஏ.மிஸ்காத்)

அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்து அருமைப் புதல்வனை அறுத்துப் பலியிடத் துணிந்த அருமைத் தந்தையினதும்,அருமைத் தந்தையின் ஆணையை அணுவளவேணும் தவறாமல் அறிய உயிரை அர்ப்பணிக்கத் துணிந்த  அருமைப் புதல்வனினதும்.தியாக வரலாற்றை உலகறியச் செய்யும், ஈதுல் அல்ஹா – பெருநாளைக் கொண்டாடும்.

எனது இஸ்லாமிய சகோதரர்களுக்கும், எனது அரசியல் வாழ்வு உயர் நிலை அடைய அன்று முதல் இன்று வரை எனக்கு ஆதரவளித்த சிறுபான்மை, பெரும்பான்மை சகோதரர்களுக்கும் எனது இதயபூர்வமான ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சியடைகிறேன் .

அதேவேளை இந் நல்நாளில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமில்லாத ஒரு தேசிய ஒருமைப்பாடு, எமது இலங்கை மணி திரு நாட்டில் என்றென்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கையேந்தி பிரார்த்திக்கின்றேன்.

Related posts

பஷீரின் நீக்கம் சரியானதா?

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவின் மீளாய்வு

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவு

wpengine