பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

திறப்பனை பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முரியாக்கடவளை வட்டாரத்திலிருந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய முஜிபுர் ரஹ்மான் மற்றும் லபுநோருவ வட்டாரத்திலிருந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய மரியா லியனகே ஆகியோர் இன்று அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

குறித்த இந்த நிகழ்வில் கட்சியின் அனுராதபுர மாவட்ட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சபை அமர்வுகள் ஆரம்பிக்கும் தினத்திலிருந்து தனது சேவைகள் தொடரும் என்றும், தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களுக்கு ஓர் சேவகனாக இருந்து பிரதேச குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய மூச்சாய் நின்று பாடு படுவேன் என்றும் இந்நிகழ்வில் உரையாற்றிய திறப்பனை பிரதேச சபைக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள முஜிபுர்ரஹ்மான் தெரிவித்தார்.

Related posts

பஷீர் ஷேகுதாவூத்துக்கு இளம் இரத்தங்களின் திறந்த மடல்

wpengine

மன்னார் மது விற்பனை நிலையத்தில் தரமற்ற மது! நகர சபை தவிசாளர் அதிக கவனம்

wpengine

இம்மாதம் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக அறிவிப்பு .

Maash