பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு 200000 ரூபாவுக்கு மேல் அதிகரிப்பு

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு திடீரென கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் யாழ்ப்பாணம் போன்ற தொலைதூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு மாதாந்தம் எரிபொருளுக்காக கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மேலதிக தொகை வரவு வைக்கப்படும்.

மற்ற மாகாணங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும் 100,000க்கு மேல் பெறுவார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் கொடுப்பனவு கடந்த ஜூன் மாதம் வரை பழைய எரிபொருள் விலைக்கே மாற்றியமைக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, அதிகரித்த எரிபொருள் விலையின் அடிப்படையில் கொடுப்பனவு  கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு புதிய எரிபொருளின் விலைக்கு ஏற்ப கொடுப்பனவை மாற்றி அமைக்குமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எரிபொருள் பிரச்சினை காரணமாக வெகு தொலைவில் உள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக அரிதாகவே பாராளுமன்றத்திற்கு வந்தனர்

Related posts

சம்பூர் சம்பவங்கள் போல் வேறெங்கும் நடந்ததில்லை – மஹிந்த

wpengine

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016-2017 வருடாந்த ஒன்று கூடல்

wpengine

புரெவி புயல் யாழ்ப்பாணத்தில் 456குடும்பங்கள் பாதிப்பு

wpengine