பிரதான செய்திகள்

பாராளுமன்றம் செல்கிறார் ஞானசார தேரர்?

எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஊடாக கலகொட அத்தே ஞானசார தேரரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அண்மையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கட்சியின் முன்னாள் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரை கட்சியிலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டு, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசியப் பட்டியல் உறுப்பினராக தனது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்மொழிந்தமையின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்னும் இரண்டு வாரங்களில் AJI-NO-MOTO சுவையூட்டிக்கு முற்றுபுள்ளி

wpengine

அரச ஊழியர்களுக்கு 23ஆம் திகதி சம்பளம் வழங்க வேண்டும்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor