பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள், இன்று என்னைச் சந்தித்தார்:

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதி சுப்ரமணியம் சுவாமிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு…

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும், இந்திய மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி அவர்கள், இன்று காலை, ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்தை என்னைச் சந்தித்தார்.

ஏற்கெனவே பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியன் சுவாமி அவர்கள்,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருப்பதோடு,

இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்காக இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியவர் ஆவார்.

பொருளாதார நிபுணரும் புள்ளியியல் வல்லுநருமான சுப்ரமணியன் சுவாமி அவர்கள்,

பாதுகாப்புச் செயலாளராக நான் பொறுப்பு வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் போது, விரிவுரையாளராகவும் வருகை தந்து கலந்துகொண்டிருந்தார்.

சுப்ரமணியன் சுவாமி அவர்களை, அவரது இந்த விஜயத்தின் போதும் சந்திக்கக் கிடைத்தமையிட்டு்எனது மகிழ்ச்சியை அவரிடம் நான் தெரிவித்தேன்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares