(அஷ்ரப் ஏ சமத்)
இந்தியாவில் உள்ள மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்க தரிசனம் இன்று(6)ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வினை பர்மா குமாரி ராஜா ஜோக நிலையம் ஓழுங்கு செய்திருந்தது. இக் கண்காட்சியில் பாரத நாட்டில் உள்ள சோமநாதா், மல்லிகா்ஜூன் மகாகாலேஸ்வரன் , ஓங்காரேஸ்வரா், கோரநாதா், பீமாசங்கா், கிருஸ்னேஸ்வரர், இராமேஸ்வரம், நாகேஸ்வரா், வைத்யநாதா், திரியம்பகேஸ்வரா், விஸவ்வநாதா், ஆகிய 12 ஜோதி லிங்க தரிசனம் மக்கள் பாா்வைக்காக சரஸ்வதி மண்டபத்தில் மக்கள் ஆரதனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
7ஆம் திகதி காலை 09.00 முதல் மறுநாள் இரவு 9.00 வரை சிவராத்திரி தினமும் இங்கு அனுஸ்டிக்கப்பட உள்ளது.
இங்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால இக் கா ட்சிகளை பாா்வையிட்டாா். அத்துடன் தரிசனம், இவ்விடயங்கள் சம்பந்தமான புத்தகங்களையும் விலைகொடுத்து வாங்கிக் கொண்டாா்.