பாப்பரசர் பிரான்சிஸ்க்கு கூட கொரோனா வைரஸ் சோதனை

பாப்பரசர் பிரான்சிஸ் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இத்தாலியில் கொரொனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும், அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


சளி தொல்லையால் அவதிப்படுவதால் முதன்முறையாக ஞாயிறு பிராத்தனை கலந்து கொள்ளப்போவதில்லையென பாப்பரசர் பிரான்சிஸ், தெரிவித்திருந்தார்.


இத்தாலியில் கொரொனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவரின் இந்நிலைமை குறித்து பலரும் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து அவர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து வத்திக்கான் செய்தி சேவை உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை,
83 வயதான பாப்பரசர் பிரான்சிஸ், பல வருடங்களுக்கு முன்னர் ஒருவித நோய் காரணமாக ஒரு தமது நுரையீரல் சத்திரசிகிச்சையை ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 165 total views,  3 views today

Comments

comments

Shares