செய்திகள்பிரதான செய்திகள்

பாதுகாப்பில் இருந்த பாதாள கும்பலை சேர்ந்த ஒருவர் தப்பிக்க உதவிய போலீஸ் கான்ஸ்டபிள் இந்தியாவில் கைது .

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக என்பவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க  தெரிவித்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிளுடன் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” கடந்த 2023 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். 

இதற்கு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உதவி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை இந்தியாவில் வைத்து கைது செய்துள்ளனர். 

Related posts

அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம், சுழற்சி முறை சத்தியாக்கிரகம்

wpengine

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட சபைகள் போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டும்

wpengine

‘ஒன்றிணைந்த எதிரணியென அழைக்க வேண்டாம்’

wpengine