பிரதான செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு)

தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளினாலும் வெள்ளப்பெருக்கு  மற்றும்  மண்சரிவினால் பாதிப்புற்ற மக்களுக்கு வசதிபடைத்தவர்கள் உதவ வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்  அமைச்சருமான றிஷாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்னிலங்கையில் பல மாவட்டங்களில் மக்கள் பாதுகாப்புக்கருதி வெளியேறி பல்வேறு இடங்களில் தஞ்ஞம் புகுந்துள்ளனர். இவ்வாறு கஷ்டப்படும் மக்களுக்கு முடிந்தவரை கைகொடுப்பது நமது கடமையாகும். என்றும் அமைச்சர் றிஷாட் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்ததத்தினால் மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை, களுத்துறை, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளுடனும் அமைச்சர் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் நிலவரங்கள் மற்றும் தேவைகள் குறித்து எடுத்துறைத்தார். அத்துடன் காலி மாவட்டத்தில் சில போர்வை போன்ற கிராமங்களில் மக்கள் இன்னும் வெளியேற முடியாமல் நிர்க்கதியான நிலையில் இருப்பதையும் அவர் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி நிவாரணப்பணியாளர்களை இந்த மீட்பு முயற்சியை துரிதப்படுத்துமாறு வேண்டிக்கொண்டார்.

Related posts

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் பாரபட்சம்

wpengine

3,000 மெட்ரிக் தொன் உணவினை நன்கொடையாக வழங்கிய அமெரிக்கா

wpengine

மன்னார்-கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதி தனிமைப்படுத்தல்

wpengine