பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள், காலணிகளின் விலையை குறைக்க நடவடிக்கை!

பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைப் பைகள் மற்றும் காலணிகளின் விலைகள் தொடர்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தற்போது காலணி மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு உள்ளூர் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன.

டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை வழங்குமாறு
வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்துக்கு இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய உத்தரவிட்டார்.

விலை குறையவில்லை என்றால் உடனடியாக ஜனாதிபதிக்கு அறிவித்து விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நேகம சிறுவர் பாடசாலையின் கண்காட்சி (படங்கள்)

wpengine

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை

wpengine

அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் அதிதியாக முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine