அரசியல்பிரதான செய்திகள்

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாகள்- தனது அறிக்கையிலிருந்து பின்வாங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பங்கேற்க அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய தனது முந்தைய அறிக்கையிலிருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் அது போன்ற எந்த விதியும் விதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர் ஆனால், பாடசாலை அமைப்புகளை அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினார்.

கல்வி அமைச்சராக பிரதமர் விதித்ததாகக் கூறப்படும் தடை இருந்த போதிலும், அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலை நிகழ்வுகளில் எவ்வாறு கலந்து கொள்கிறார்கள் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கேள்வி எழுப்பிய போதே, ஹரிணி, தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், 

அத்தகைய தடை எதுவும் இல்லை எனவும் முன்னர் தாம் வெளியிட்ட கருத்தை, ஊடகங்கள் தவறாக அறிக்கையிட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய:https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை அதிபரின் கேவலமான செயல்! பலர் கண்டனம்

wpengine

வவுனியாவில் மல்வத்து ஓயா திட்டத்தில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயட்சி.

Maash

வவுனியா நகரசபை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை

wpengine