பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பாடசாலை அதிபரின் திடீர் இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பாடசாலை அதிபரின் திடீர் இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரி மன்னார் சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இணைந்து இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திடீர் என மன்னார் வலயக்கல்வி பணிமனையினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி இன்று பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலைக்கு முன் ஒன்று கூடிய சாந்திபுரம், ஜீவநகர், ஜிம்ரோன் நகர் கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் குறித்த பாடசாலை அதிபரின் இடமாற்றம் தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் பாடசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தங்களிடம் எந்த ஒரு
கருத்துக்களையும் கேட்காது இடம் மாற்றம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த இடம்மாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யும் வரை பாடசாலை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் இன்றைய தினம் பாடசாலை பொறுப்புக்களை ஒப்படைத்து மாற்றம் பெற்று செல்ல வருகை தந்த அதிபரையும் குறித்த பெற்றோர்கள் பாடசாலை வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலனாதனின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.

இதேவேளை மன்னார் நகர சபை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

அதே நேரத்தில் குறித்த இடம்மாற்றம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பாடசாலை நலன் புரிசங்கத்தினருடன் கலந்து பேசி ஆலோசனைகள் பெற்ற பின் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வலயகல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


குறித்த அதிபரை மீள நியமிக்கும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடபோவதில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு தழுவிய EMS (Express Mail Service) ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம், இன்று யாழ்ப்பாணம் அஞ்சல் அலுவலகத்திலும் இடம்பெற்றது.

Maash

உள்ளுராட்சி மன்ற தேர்தல்! மஹிந்த ஜப்பான் விஜயம்

wpengine

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலிருந்து ஊழல் மோசடிகள்

wpengine