பஸ் போக்குவரத்து சேவையில் இலத்திரனியல் கட்டண செலுத்துகை அட்டை

பஸ் போக்குவரத்து துறையில் பயணிகள் தமது கட்டணத்தை செலுத்த இலத்திரனியல் கட்டண செலுத்துகை அட்டையை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இன்றைய தொழினுட்ப உலகில் பொது போக்குவரத்து துறையில் அதிகமான நாடுகள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன.

பயணிகள் தகவல்களை பெற்று கொள்ளவும், கட்டணங்களை பயணிகளிடம் இருந்து இலகுவாக அறவிடவும் இந்த சேவை பயனுள்ளதாக உள்ளது.

தொழினுட்ப அட்டை மூலம் கட்டணங்களை அறவிடும் போது துல்லியமாக குறிப்பிட்ட கட்டணத்தை பயணிகளிடமிருந்து அறவிட முடியும். இதன்மூலம் பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் இடையில் சர்ச்சைகள் ஏற்படாது.

இதனடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் போக்குவரத்து ஆணைக்குழு,  இலங்கை தகவல், தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பம் பிரதி முகவராண்மை , தனியார் பஸ் உரிமையாளர்கள், அரச வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப கம்பனிகள் ஆகியவற்றின் துணையுடன் இலத்திரனியல் கட்டண செலுத்துகை அட்டையை அறிமுகம் செய்வதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares