பஸ்ஸில் பெண்ணை தாக்கிய பௌத்த பிக்கு! கைது

அழுத்கம நோக்கி பயணிக்க தயாராக இருந்த பேருந்தில் வைத்து பெண்ணொருவர் தாக்கப்பட்டுள்ளார்.


அம்பலங்கொட பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்குள் வைத்து பெண்ணை தாக்கியதாக கூறப்படும் பிக்கு கைது செயப்பட்டுள்ளார்.


நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக அம்பலங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கொபல்லவ விஜித என்ற 72 வயதுடைய பிக்கு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பலபிட்டிய வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான பெண் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares