பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை! வெளிநாடு செல்லவும் தடை

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.கே.ஏ.ரணவக ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சந்தேகநபர்களை ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவர்கள் வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares