பஷிலின் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைப்பு

தன்னைக் கைதுசெய்வதை தவிர்க்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனு தொடர்பான ஆவணங்களை வழங்க காலஅவகாசம் தேவை என, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கோரினார்.

இதன்படி, இந்த வழக்கை ஜூன் 8ம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares