பவித்ரா அமைச்சு பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை

சுகதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்படலாம் அல்லது அவரது அமைச்சு பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது அறிந்து கொண்டதன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.


கொரோனா வைரஸ் தொற்று நோய் நிலைமையில் சுகாதார அமைச்சர் என்ற வகையில் பவித்ரா வன்னியாராச்சியின் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியில்லை என்ற காரணத்திலேயே அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.


குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மருத்துவர் ரமேஷ் பத்திரன மற்றும் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆகிய இருவரில் ஒருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படலாம் என அறியகிடைத்துள்ளது.


விசேடமாக தொற்று நோய் பரவி வரும் நிலைமையில் அந்த துறைசார்ந்த புரிதல் உள்ள மக்கள் பிரதிநிதி ஒருவரை சுகாதார அமைச்சராக நியமிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என அரசாங்கத்தில் தலைவர்கள் கருதுகின்றனர்.


அதேவேளை 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திலும் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது 26 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதனால், ராஜாங்க அமைச்சரான மருத்துவர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவை சுகாதார அமைச்சராக நியமித்து அமைச்சரவையில் உள்ளடக்குவதில் தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares