பழைய வாகனத்துக்கு புதிய சாரதி என்ற பொருளாதார நிலை மாற வேண்டும்: ஜே.வி.பி

நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று கடுமையாக விமர்சித்தார்.

முன்னைய அரசாங்கம் பாரிய வட்டிகளுக்கு கடன்பெற்றதாக கூறி தற்போதைய அரசாங்கமும் அதிக வட்டியுடனான கடன்களை பெறுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இலங்கையை பொறுத்தவரை புதிய பொருளாதாரக் கொள்கை தேவை.

அதனைவிடுத்து பழைய பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் காரணமாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

இலங்கையில் உள்ளூர் உற்பத்திகள் எவையும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஜப்பானில் இருந்து காரை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதால், உள்ளூர் உற்பத்திக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை.

இந்தநிலையில் பழைய வாகனம், அத்துடன் பழைய வீதியில் சாரதி மட்டும் புதியவராக இருந்து பிரயோசனமில்லை.

ரயில் வண்டி வந்து நிலையத்தில் தரித்து நின்றதும் அதில் புதிய சாரதி ஒருவர் ஏறி செல்வது போன்றே இலங்கையின் அரசியலில் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது மாற்றம் பெறவேண்டும். கடன், வட்டி, அபராதம் என்ற அடிப்படையில் இல்லாமல் புதிய முயற்சிகளுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும்.

இன்று அரசாங்கம், பொதுமக்களிடம் இருந்து அதிக சம்பாதியத்தை எதிர்ப்பார்க்கிறது.

இதன்காரணமாகவே வீதியில் நிற்கும் பொலிஸாரிடம் வாகன சாரதிகளிடம் இருந்து அதிகளவான அபராதத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் வீதி ஒழுங்குகளை பார்க்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares