பிரதான செய்திகள்

பழுதடைந்த உணவுகளை மாணவர்களுக்கு வழங்கும் வவுனியா பாடசாலை

வவுனியா – பாவற்குளம் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு சமைத்து வழங்குவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ்விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

“வவுனியா – பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 6க்குள் கல்வி பயிலும் 11 மாணவர்கள் உள்ளனர்.

குறித்த மாணவர்களுக்கு அரசினால் சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலையிலேயே சமைத்து உணவுகள் வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில் நேற்றைய தினம் குறித்த பாடசாலையில் சமையல் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அங்கு அழுகிய நிலையில் இருந்த கிழங்குகள் ,வெங்காயம், பழுதடைந்த அரிசி போன்ற சமையல் பொருட்கள் காணப்பட்டுள்ளன.

குறித்த நபர் இது தொடர்பாக பாடசாலையின் பொறுப்பாசிரியர் ஒருவரிடம் வினாவிய பொழுது,
“குறித்த சமையல் பொருட்கள் மாணவர்களுக்கான உணவு சமைப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் என தெரிவித்துள்ளார்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் நடக்கும் இந்த மோசடிகள் தொடர்பாக உரிய அதிகாரிகள்நடவடிக்கை எடுப்பார்களா?

Related posts

நுண்கடன் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த அமைச்சர் றிஷாட் பேச்சுவார்த்தை

wpengine

கம்பஹா நகர எல்லைக்குள் முகமூடி ஹெல்மட், அபாயா, புர்காவுக்கு தடை

wpengine

ஞான­சார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

wpengine