பிரதான செய்திகள்

பழிவாங்கல்களை தடுக்க நீதிமன்றம் செல்லும் ஐ.தே.க

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தை நாடத் தீர்மானித்துள்ளனர்.


இதற்கான சட்ட நடவடிக்கை மற்றும் ஆலோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் குழு மேற்கொள்ள உள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையுடன் நிறுத்தாது தொடர்ந்தும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தால், சர்வதேச வரை சென்று முறைப்பாடுகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

Related posts

முதியவரை காலால் எட்டி உதைக்கும் பா.ஜ.க. எம்.பி: வைரல் வீடியோ!

wpengine

முறிந்த நிலையில் மின் கம்பம்! பிரதேச மக்கள் விசனம்

wpengine

மன்னார் வைத்தியசாலை கட்டுமானம் ,மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி.

Maash