பிரதான செய்திகள்

பள்ளிவாசல் மீது தாக்குதல்! வித்தியாசமான தண்டனை

பொரளை பகுதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியதாக ஒப்புக்கொண்ட ஐவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வித்தியாசமான தண்டனை ஒன்றை வழங்கியுள்ளது.

வௌ்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50,000 ரூபா நிதியை பொரளை விஜிரஞானாராமய விஹாரை ஊடாக பெற்றுக் கொடுக்குமாறு, இவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என முறைப்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து கோரப்பட்டிருந்தது.

இதனை கருத்தில் கொண்ட, நீதிபதி அவ்வாறே செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி குறித்த பள்ளிவாசல் மீது கற்களால் தாக்குதல் நடத்தியதாக, இவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து, இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டமையால் சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு நஸ்டஈடாக 50,000 ரூபாவை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் குறித்த நிதி பள்ளிவாசலுக்கு தேவையற்றது என கூறிய முறைப்பாட்டாளர்கள் தரப்பினர், அதனை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும் குறிப்பிட்டனர்.

இவற்றை கருத்தில் கொண்ட நீதிபதி இந்தப் பணத்தை பொரளை விஜிரஞானாராமயவிற்கு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

சீ.வி.விக்னேஸ்வரனால் திறக்கப்பட்ட விடுதியின் அவல நிலை! மக்கள் விசனம்

wpengine

சாவற்கட்டு மற்றும் சின்னக்கடை கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு மன்னார் பிரதேச செயலாளரின் அவசரச் செய்தி

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்மானம் அரசியல் கோணம்

wpengine