பிரதான செய்திகள்

பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ரெலோ அழைப்பு

பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ரெலோஅழைப்பு இன்று 23.10.16.ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்பல்கலைக்கழக மாணவன்படுகொலையை ஆராய அனைத்துக்கட்சிகளுக்கும் ரெலோ அழைப்பு.

விசேடஅதிரடிப்பொலீசின் ரோந்து நடவடிக்கை ஆரம்பித்து சில மணிநேரத்தில் யாழ்பல்கலைகழக மாணவர்களான கிளிநொச்சியைச்சேர்ந்த நடராஜா கஜன் மற்றும் சுண்ணாகத்தைச்சேர்ந்தவிஜயகுமார்(பவுண்ராஜ்)சுலக்‌ஷன் ஆகியோர் 21.10.16 அதிகாலை அதிரடிப்பொலீசின்துப்பாக்கிப்பிரயோகத்தில் மரணமான செய்தி யாழ்குடா நாட்டுத்தமிழர்கள் மட்டுமல்லஉலகவாழ்த்தமிழர்கள் மத்தியிலும் கவலையையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

மேலும் இதுபோன்ற தமிழினத்திற்கெதிரான வன்முறை இன அழிப்பு போன்ற கொடூரங்கள்மறுபடியும் தலைகாட்ட தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் அனைவரையும் ஆள்கொண்டுநிற்க்கின்றது.

இத்தக்கொடூர சம்பவமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்என்பதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் உறுதியோடு செயல்ப்படும் என்பதை கட்சியின்செயலாளர் நாயகம் திரு ஶ்ரீகாந்தா தெரிவித்ததோடு இந்தப்படுகொலைக்கும்இதுபோன்றதொரு படுகொலை நெருக்கடியினை மீண்டும் அரங்கேறமல் தடுப்பதற்கானநடவெடிக்கை ஒன்றினை உடனடியாக மேற்க்கொள்ளும் விதமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தமிழரசுக்கட்சி(ITAK),ஈழப்புரட்சிகரவிடுதலைமுன்னணி(EPRLF),தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம்(PLOTE) மற்றும்தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி(TNPF),ஈபிஆர்எல்எவ் பத்மநாபணி(EPRLF Naba Faction) ஆகிய கட்சிகளை அழைத்து ஆராய்ந்து எதிர்காலத்தில்  நாங்கள் எடுக்கவேண்டிய தீர்மானங்கள்முடிவுகள் சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்றை நடத்த அழைப்புவிடுத்துள்ளது.

 

Related posts

பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு! குரங்கள் அடையும் வீடுகள்

wpengine

ஒருங்கிணைப்பு குழு பதவியினை இராஜனமா செய்த தொண்டமான்!

wpengine

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயம்

wpengine