பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பலரிடம் இலட்சக்கணக்கான பணம் வேலைவாய்ப்பு தருவதாக ஏமாற்றிய நிதி அமைச்சில் தொழில்புரியும் தாரீக்

புத்தளத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் நிதி அமைச்சு காரியாலயத்தில் வேலை செய்யும் அரச உத்தியோகத்தர் தாரிக் அவர்கள் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அரிசியும் , பேரித்தம்பழம் மட்டும் யாழ் முஸ்லிம்களுக்கு தந்துள்ளார் எனும் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறேன் .

இந்த தாரிக் என்பவர் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் கிளிநொச்சி இணைப்பாளர் என்ற போர்வையில் தொழில் வாய்ப்புப்பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் இலட்சக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு தருவதாக ஏமாற்றி தெரிந்த நபர்தான் இந்த தாரிக் என்பவர். இவரை எமது தலைமை ஒதுக்கியதை பழிவாங்கும் சந்தர்ப்பமாக இத்தேர்தலில் அமைச்சருக்கு எதிரான போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்ம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பொறியியலாளர் ரிசாத் பதியுத்தீன் அவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் கல்வி , உரிமை , பாதை , வீட்டுத் திட்டம் உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் விடயத்தில் சேவை செய்த தலைவர் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் மட்டுமே .

இன பேதமின்றி மக்களுக்கு சேவை செய்யும் கட்சி மக்கள் காங்கிரஸ் , அதன் தலைவர் 24 மணித்தியாலங்கள் மக்களுக்காக சேவையை வாழ்க்கையாகக் கொண்டவர். கூலிக்கு மாறடிக்கும் ஒரு சிலரின் செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் . வடக்குச் செயலணியூடாக சுமார் 18 கோடிக்கு மேல் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக அபிவிருத்தி செய்த தலைமை எமது தலைவர் . புத்தளத்தில் வாழ்கின்ற யாழ் முஸ்லிம்கள் நன்றியுணர்வை காட்டும் தேர்தலை சந்தித்துள்ளோம். எமது தலைமை எங்களது முகவரி !!!

சிந்தித்து வாக்களியுங்கள்

கே.எம் நியாஸ் நிலாம்

ஊடகப் பிரிவு-

Related posts

சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லதீப்க்கு பதவி வழங்கப்படவில்லை.

wpengine

தனிமனித சுயகௌரவம் பற்றி தெரியாத மு.கா.கட்சியின் முதலமைச்சர் (விடியோ)

wpengine

இஸ்ரேலின் அராஜகத்திற்கு எதிராக எழுந்திட முடியாத கோழைகளாக இருப்பதையிட்டு நாம் வெட்கமும் வேதனையும் பட வேண்டும்-முஜீபுர்

wpengine