பலத்த மழை காரணமாக 57 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன: 251 பேர் பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மலையகத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பண்டாரளையில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளதுடன் பனி மூட்டத்துடனான வானிலை காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை அதிக மழை காரணமாக பலப்பிட்டி களப்பை, அண்மித்த பாத்தமில்ல ஒவுலான – அந்தரவெல பகுதியில் 57 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்தின் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நீர் வடிந்தோடுவதற்கு கொஸ்கொட கழிமுகத்தை விரிவுபடுத்தியுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares