பிரதான செய்திகள்

பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் அதிகூடிய வருமானம் இலங்கைக்கு

பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் சமீப காலத்தில் பெறப்பட்ட ஆக கூடிய வருமானத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டுள்ளது.

இதற்கு அமைவாக 2021 ஆம் ஆண்டியில் மாத்திரம் பெறப்பட்ட வருமானம் ஒரு இலட்சத்து மூவாயிரம் மில்லியன் ரூபாய்களாகும். இதனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 41 வீத அதிகரிப்பாகும். இதில் ஆக கூடிய வருமானம் கறுவா மூலம் பெறப்பட்டுள்ளது.

18,814 மெட்றிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் பெறப்பட்ட வருமானம் 45இ879 மில்லியன் ரூபா ஆகும். கடந்த வருடத்துடன் இதனை ஒப்பிடுகையில் 20 வீத அதிகரிப்பாவதுடன் மொத்த பலசரக்கு ஏற்றுமதி வருமானம் 45 வீதமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க, மெக்சிகோ, பேரு ஆகிய நாடுகளுக்கு கறுவா கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மிளகு ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட வருமானம் 22,669 மில்லியன் ரூபாவாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 148.3 வீத அதிகரிப்பாகும். 15,959 மெற்றிக் தொன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கறுவாவிற்கு பெறுமதி சேர்க்கப்பட்டு இவ்வாறு சர்வதேச சந்தையில் வெற்றிகொள்ளப்பட்டிருப்பதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனக்க லிந்தர தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் இலங்கை ஏற்றுமதி செய்துள்ள மொத்த பலசரக்கு 62,981 மெற்றிக் தொன் ஆகும்.

Related posts

ஹக்கீமை பூஜை செய்ய மர்ஹூம் அஷ்ரஃபின் கபூரில் பூ பறிக்கும் ஜவாத்

wpengine

‘24 மணிநேரமும் மூடிய அறைக்குள் அடைத்து வைத்துள்ளனர்’ ஜனாதிபதியிடம் நீதிகேட்ட ரிஷாட் எம்.பி.

wpengine

இரணைதீவு மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும்! வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine