பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் வாழ்த்து செய்தி

கடந்த வருடம் நடைபெற்ற க.பெ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி தற்போது சித்தியடைந்துள்ள சகல மாணவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல பிரதேசங்களில் வறுமைக்கு மத்தியிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு மாணவர்கள் சிலர் பரீட்சைக்கு தோற்றி இன்று சித்தியடைந்துள்ளனர். அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்திக்கிறேன்.
விசேடமாக, வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. இது தொடர வேண்டும். சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சித்தியடையாத மாணவர்கள் மீண்டும் முயற்சிக்க வேண்டும். தொழிநுட்பம் சார்ந்த வேறு துறைகளில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
– என அவர் மேலும் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares