செய்திகள்பிரதான செய்திகள்

பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது .

இரத்தினபுரி, அயகம, கங்கொடகந்த பிரதேசத்தில்  பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாடகர் இராஜ் விக்கிரமரத்னவின் கோரிக்கை ஒன்று! அமைச்சர் றிசாட் ஒரு இலட்சம் வேலை திட்டம்

wpengine

கடந்த அரசாங்கத்தில் சிறந்த வடிகால் அமைப்பு திட்டம் அமுல்படுத்தப்படவில்லை -எஸ்.எம் மரிக்காா்

wpengine

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!! JAFFNA NEWS TAMIL

Editor