பிரதான செய்திகள்

பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற இன்டர்போல் இலங்கைக்கு

குற்றச்செயல் பரிசீலனை, வெடிப்புச் சம்பவங்கள், பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய சர்வதேச பொலிஸ்குழுவே இவ்வாறு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இன்டர்போல் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால் நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை குண்டுத் தாக்குதல்களின் பின்னர் விசாரணைகளை பாதுகாப்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை சர்வதேச பொலிஸாரின் உதவியினை கோரியிருந்தனர். இதன்படி, விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சிறப்பு சர்வதேச பொலிஸ் குழு இலங்கைக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இன்டர்போல் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டொக், இலங்கையின் கோரிக்கைக்கு அமைய குற்றச்செயல் பரிசீலனை, வெடிப்புச் சம்பவங்கள், பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய சர்வதேச பொலிஸ்குழுவே இவ்வாறு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இந்த தற்கொலை தாக்குதலுடனான சர்வதேச தொடர்புகள் குறித்து கண்டறிவதற்காக, தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அமைப்பு தொடர்பான ஆவணங்கள், அவர்களது பயண நகர்வுகளை ஆராயும் நடவடிக்கை தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.

Related posts

சமுர்த்தி பயனாளி இரண்டாம் கட்ட கொடுப்பனவு ஏப்ரல் 10க்கு முன்

wpengine

பசீருக்கு பின்னணியில் அமைச்சர் ரிசாத் உள்ளார். முகம்மத் இக்பால் சொல்லும் காரணம்  

wpengine

கண்டி மாநகர எல்லையில் பாதயாத்திரை செல்ல முடியாது- நீதி மன்றம்

wpengine