உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

‘பனாமா லீக்ஸ்’ விவகாரம்! உண்மையை ஒப்புக்கொண்ட பிரதமர் (வீடியோ)

‘தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான்’ என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமெரூன் ஒப்புக்கொண்டுள்ளார்.
‘பனாமா லீக்ஸ்’ என்றழைக்கப்படும் ரகசிய ஆவண தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 12 நாடுகளின் இந்நாள், முன்னாள் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை இயன் கேமரூனும் ஒருவர்.

கடந்த 2010 ம் ஆண்டு இயன் கேமரூன் இறந்த பிறகு, வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் மூலம் டேவிட் கேமரூனும் பலன் அடைந்துவந்ததாக கூறப்பட்டது. எனினும் இந்த தகவலை டேவிட் கேமரூன் மறுத்தார். இந்நிலையில் தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடந்த நேர்காணலில் டேவிட் கேமரூன் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

 

இது தொடர்பாக அவர் கூறுகையில், ” கடந்த காலங்களில் என்னிடம் பங்குகள் இருந்தன. எனது தந்தை ஒரு பங்கு தரகர் என்பதால் இது இயல்பான ஒன்றுதான். எனினும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதால் கடந்த 2010-ம் ஆண்டே அவற்றை விற்றுவிட்டேன். எனக்கும் எனது மனைவி சமந்தாவுக்கும் 5000 யூனிட்கள் வரை பங்குகள் இருந்தன. அதன் மதிப்பு 30 ஆயிரம் பவுண்டாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த ஒப்புதல் இங்கிலாந்து அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து கேமரூன் உடனடியாக விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Related posts

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகல்

wpengine

அமெரிக்கா ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

wpengine

கொங்கிரீட் வீதி அமைப்பதற்காக இடங்களை பார்வையிட்ட அமீர் அலி

wpengine