பத்ர் யுத்தத்துக்கு பயங்கரவாதச் சாயம்! ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெறியாட்டம்

[எம்.ஐ.முபாறக் ]

மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் இடம்பெற்று வரும் யுத்தத்தால்- மேற்கு நாடுகளின்சதித் திட்டத்தால் இன்று அப்பாவி முஸ்லிம்கள் பெரும் உயிர்ச் சேதங்களையும்பொருட்சேதங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.சிரியா,யெமென் ,ஆப்கான் மற்றும்பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தற்போது இடம்பெறும்  நிகழ்வுகளை நாம் அறிவோம்.

இஸ்லாமிய பேரரசு என்ற பெயரிலும் இஸ்லாமிய எதிரிகளுக்கு எதிரான போராட்டம் என்றபெயரிலும் முஸ்லிம்களால் முஸ்லிம்கள் கொல்லப்படும் நிகழ்வுகள்  தினமும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.ஆயுதக் குழுக்களை -பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுகிறோம் என்றபெயரில் அமேரிக்கா,ரஷ்யா போன்ற வல்லரச நாடுகள் நடத்தும் நாடகத்தால் பயங்கரவாதம்ஒழித்துக் கட்டப்படுவதிலும் பார்க்க அப்பாவி மக்கள் ஒழித்துக்கட்டப்படுவதுதான் அதிகம்.

தலிபான்களுக்கு எதிராக ஆப்கானில்-பாகிஸ்தானில் அமேரிக்கா நடத்துகின்ற விமானத்தாக்குதல்களாக இருந்தாலும் சரி,மத்திய கிழக்கில் அமேரிக்கா நடத்துகின்ற தாக்குதல்களாகஇருந்தாலும் சரி அதிகம் கொல்லப்படுவது அப்பாவி மக்கள்தான்.அவர்களின் உண்மையானஇலக்கும் அவர்கள்தான்.

தானே ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவற்றை அழிப்பது போன்று நாடகமாடி மக்களைமாத்திரம் அழித்துக்கொண்டிருக்கும் அமேரிக்கா போன்ற நாடுகள் அவர்களின்  அந்தசெயற்பாட்டை நிறுத்தினால் மாத்திரமே உலகில் பேரவலம் முடிவுக்கு வரும்.

அந்த வகையில்,முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை அழிக்கும்-இஸ்லாத்துக்குப்பேரவமானத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐ.எஸ்பயங்கரவாதிகள் அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அந்த நாசகாரத் திட்டத்தைமிகவும் திறம்பட நிறைவேற்றி வருகின்றனர்.

வெவ்வேறு காரணங்களைக் காட்டி முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும்கொலை செய்து வருகின்றனர்;இஸ்லாத்தை முழுமையாக அவமானப்படுத்தி மாற்றுமதத்தவர்களின் மத்தியில் இஸ்லாத்தைக் கேள்விக்குட்படுத்தி வருகின்றனர்.

முஹம்மது நபி அவர்கள் எவ்வாறு இந்த இஸ்லாத்தைத் தந்துவிட்டுப் போனார்களோ-எவ்வாறு அதைப் போதித்தார்களோ அதற்கு மாற்றமாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் செயற்பட்டுவருகின்றனர்.யுத்தத்தில் சிறுவர்கள்,வயோதிபர்கள்,நோயாளர்கள்,யுத்தத்தில் எந்தவகையிலும் தொடர்புபடாதவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் ஆகியோரை கொல்லமுடியாது.இந்த முறைமையை முஹம்மது நபி அவர்கள் எல்லா யுத்தங்களிலும்நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.

யுத்தத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் கல்வியைப் பெற்றுக் கொண்டு அவர்களை நபிஅவர்கள் விடுதலை செய்திருக்கின்றார்கள்.மக்கா வெற்றியின்போது அப்பாவி மக்கள் எவரும்தாக்கப்படவில்லை.

முஹம்மது நபி அவர்களின் ஆட்சியின்கீழ் மாற்று மத மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததுபோல்வேறு எந்த ஆட்சியின்கீழும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

ஆனால்,இப்போது நடப்பது வேறு.முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள்;இஸ்லாம்என்றால் பயங்கரவாதத்தைப் போதிக்கும் மதம் என்று முஸ்லிம்களை வைத்தே மேற்குநாடுகள் பிரசாரம் செய்கின்றன.அந்தப் பிரசாரக்  கருவிகளுள் ஒன்றுதான் இந்த ஐ.எஸ்பயங்கரவாத இயக்கம்.

இஸ்லாத்தின் தூய்மையான-வெற்றிகரமான ஆட்சி முறையான கிலாபத் ஆட்சிமுறைமையை பிழையாகச் சித்திரித்து அதனூடாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும்பிழையாக காண்பிக்கும் சதித் திட்டத்தை இன்று இந்த பயங்கரவாதிகள் செய்துவருகின்றனர்.அமேரிக்கா,இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வழங்கும்ஆலோசனைகளுக்கு அமைய இந்தப் பயங்கரவாதிகள் செயற்பட்டுவருகின்றனர்.மறுபுறம்,தங்கள்மீது உலகின் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஐ.எஸ்இயக்கம் மீது இந்த நாடுகள் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.

இவ்வாறு இஸ்லாத்தின் எல்லா விடயங்களையும் பிழையாகச் சித்திரித்து வரும் ஐ.எஸ்பயங்கரவாதிகள் இப்போது புனித நோன்பின் மீதும் கைவைத்துள்ளனர்.இஸ்லாத்தைப்பாதுகாப்பதற்காக முஹம்மது நபி அவர்களின் தலைமையில் அப்போது நடந்த பத்ர் யுத்தத்தைஒரு பயங்கரவாதச் செயற்பாடாகக் காட்டுவதற்கு அவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த நோன்பு மாதத்தில் ஐரோப்பாவின் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.ரமழான் ஜிஹாதிகளுக்கு உரிய மாதம் என்றும் அந்த மாதத்தில் மாற்றுமதத்தவர் மீது தாக்குதல் நடத்துவது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் கூறிஅவர்கள் முஸ்லிம் இளைஞர்களை மூளைச் சலவை செய்யத் தொடங்கியுள்ளனர்.

நோன்பு மாதத்தில் நபி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பத்ர் யுத்தத்தை இந்த ஐ.எஸ்பயங்கரவாதிகள் அவர்களின் கேவலமான-பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு அந்தச்செயற்பாட்டை நியாயப்படுத்தவும் சரியான இஸ்லாமிய செயற்பாடாகக் காட்டுவதற்கும்முயற்சிக்கின்றனர்.அதுவும் இதுவும் ஒன்றே எனத் தெரிவித்து முஸ்லிம் இளைஞர்களைக்கவருவதற்கு அவர்கள் முயற்சி செய்கின்றனர்.

நோன்பு காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.பிரான்ஸில்உதைப்பந்தாட்ட  நிகழ்வும் பிரிட்டனில் விம்பில்டன் மெய்வல்லுனர் நிகழ்வும்இடம்பெறவுள்ளன.அந்த நிகழ்வுகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்கள்நடத்தப்படக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

நோன்பு மாதம் தொடங்கப்பட முன்பே நோன்பு பற்றிய பிழையான விளக்கத்தை மாற்றுமதமக்களிடம் முன்வைக்கப் போகின்றனர் இந்தப் பயங்கரவாதிகள்.நோன்பு மாதம் என்றாலேபயங்கரவாத செய்ற்பாடுகள் இடம்பெறும் மாதம்தான் என்பதுபோல் இந்தப் பயங்கரவாதிகள்செயற்படப் போகின்றனர்.புனித பத்ர்  யுத்தத்துக்கு பயங்கரவாதம் என்ற சாயத்தைப் பூசுவதேஇவர்களின் ஒரே நோக்கு.

நோன்பு மாதத்தில் நபி அவர்கள் பத்ர் யுத்தம் செய்தது சரியென்றால் நாங்களும் நோன்புமாதத்தில் யுத்தம் செய்வது சரிதான் என்பதுதான் இவர்களின் வாதமாக இருக்கின்றது.அந்தபத்ர் யுத்தமும் ஐ.எஸ்களின் பயங்கரவாதச் செயற்பாடுகளும் ஒன்றா?அது அப்பாவிகளைக்கொலை செய்வதற்காக புரியப்பட்ட யுத்தமா?

ஆகவே,நோன்பு மாதத்தில் ஐரோப்பாவில் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ்கள்அறிவித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடு என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகள் முஸ்லிம்களின்மீது கெடுபிடிகளில் இறங்கும்.அது நோன்பு மாத வணக்க வழிபாடுகளுக்கு நிச்சயம்இடையூறுகளை  ஏற்படுத்தும்.

எது எப்படியோ,மேற்கு நாடுகளின் திட்டப்படி இந்த நோன்பு மாதத்தையும் அந்த மாதத்தில்இடமெற்ற புனித பத்ர் யுத்தத்தையும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இழிவுபடுத்தப் போவதுநிச்சயம்.அந்த பத்ர் யுத்தத்தை பயங்கரவாத செயற்பாடாகக் காட்டுவதற்கு அவர்கள் எடுக்கும்முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares