பிரதான செய்திகள்

பண மோசடி தொடர்பில் முன்னாள் மாநகர சபை பெண் உறுப்பினர் கைது!

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒரு கோடியே பதினான்கு இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கிடைக்கப் பெற்ற 11 முறைப்பாடுகளையடுத்து  சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிலியந்தலை பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பண மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற 11 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கு பிலியந்தலை பொலிஸில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி அவர் பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரணிலின் வாக்குமூலத்தை அரசியலுக்கு பயன்படுத்தாமல் சட்டநடவடிக்கை எடுக்கவும்.- பாட்டலி சம்பிக்க ரணவக்க.

Maash

நாளை 7மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

wpengine

பஹ்ரெனில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடுமை

wpengine