பிரதான செய்திகள்

பண்டிகை காலம்! சதொச விற்பனை நிலையங்களில் விசேட விலைச் சலுகை

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்களில் ஆயிரத்து 515 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 975 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம் என நிதி அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

ஒரு கிலோ பருப்பு, 500 கிராம் உருளைக்கிழங்கு, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், 2 கிலோகிராம் அரிசி, 500 கிராம் கருவாடு, ஒரு கிலோகிராம் சீனி, 425 கிராம் பொதிசெய்யப்பட்ட மீன், 200 கிராம் துண்டு மிளகாய், 500 கிராம் பாசிப்பயறு மற்றும் 400 கிராம் பால்மா அடங்கிய பொதியே 975 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த விலைக் குறைப்பானது ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

 

Related posts

தண்ணீருக்கு பதில் காற்று, நீர் அமைச்சரின் புது வகை ஊழல்

wpengine

ஜவாத் தொடர்பில் மு.கா. கட்சியின் புதிய அறிக்கை

wpengine

இன்னும் சில நாற்களில் நெருக்கடிக்கடிகளை சந்திக்க நேரிடும் ஹக்கீம்

wpengine