பணியாளர்களின் சம்பளம் பாதிக்கப்பட்டோருக்கு நன்கொடை!

மின் தொலைத் தொடர்புகள் அமைச்சு மற்றும் இலங்கை டெலிகொம் குழுவினர் ஒன்றிணைந்து அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா 100 இலட்சம் நிதியை நேற்று (20) ஜனாதிபதியின் விசேட நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இதற்காக ஸ்ரீலங்கா டெலிகொம், மொபிடெல் மற்றும் டெலிகொம் குழுமத்துடன் தொடர்புடைய அனைத்து நிறுவன ஊழியர்களினதும் ஒரு நாள் சம்பளம் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் பிரதியமைச்சர் தரங்க பஸ்நாயக்க ஆகியோரின் மாதச் சம்பளமும் இதில் அடங்குவதாக டெலிகொம் குழுமத்தின் தலைவர் பீ.ஜீ. குமாரசிங்க நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares