பிரதான செய்திகள்

பணிப்பாளார் நாயகத்தை பதவி விலக்கிய பைசர் முஸ்தபா

இலங்கையின் விளையாட்டுத்துறை திணைக்கள சேவைகள் பணிப்பாளார் நாயகம் உடனடியாக பதவி விலக்கப்பட்டுள்ளதாக மாகாணசபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது
அமைச்சார் பைசர் முஸ்தபா விடுத்த உத்தரவுக்கு அமைய எச்.எம்.பி.பி ஹேரத் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த பதவி விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்னாசிய இளையோர் தடகள செம்பியன்சிப் போட்டிகள் இன்று சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் அதில் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் செய்துக் கொடுக்கப்படாமையே இந்த பதவிவிலக்கலுக்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

ராஜபக்ஷ அரசு சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை அரசு இழக்கநேரிடும்.

wpengine

எரிவாயு விலை அதிகரிப்பு

wpengine

தெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது

wpengine