பணத்தில் கொரோனா! பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன

இலங்கையில் பண பரிவர்த்தனையின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அவதானம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டில் தற்போது குறித்த சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்பட்டாலும், அது அனைத்து மாவட்டங்களுக்கும் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எவருக்கும் சந்தேகம் இருந்தால், அச்சம் கொள்ளாமல் உடனடியாக சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கொரோனா வைரஸ் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares