பிரதான செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கிய விக்னேஸ்வரன்

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்றதுடன், இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது 219 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

அதில் பெளதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளும், உயிரியல் பாடத்திற்கு 13 பட்டதாரிகளும், இணைந்த கணிதம் பாடத்திற்கு 10 பட்டதாரிகளும் உள்ளீர்க்கப்பட்டனர்.

அத்துடன் உயிரியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 15 பட்டதாரிகளுக்கும், பொறியியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 12 பட்டதாரிகளுக்கும், தொழிநுட்பத்திற்கான விஞ்ஞான பாடத்திற்கு 2 பட்டதாரிகளுக்கும் விஞ்ஞான பாடத்திற்கு 95 பட்டதாரிகளுக்கும், கணித பாடத்திற்கு 45 பட்டதாரிகளுக்குமாக நியமனங்கள் வழங்கப்பட்டன.

Related posts

இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு

wpengine

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் வடுக்கள் ஆறவில்லை

wpengine

இலங்கையர்களுக்கு அமெரிக்கா செல்ல வாய்ப்பு

wpengine