பிரதான செய்திகள்

படையினரிடம் உள்ள நிலங்களை விடுவிக்க கோரி மன்னாரில் கண்டனப் பேரணி

இலங்கை கடற்படையினர் வசமுள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை விடுவிக்ககோரி மன்னார் ஆயர் இல்லத்தின் ஏற்பாட்டினால் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி, மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்களை விடுவிக்கக்கோரியும், மக்களின் நிலங்களை விட்டு படையினரை வெளியேற கோரியும், முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்த்தியார் பேராலயத்தில் ஆரம்பமான இந்த பேரணி இறுதியாக மன்னார் மாவட்ட செயலக நுழைவாயிலை சென்றடைந்தது.

 

இந்த பேரணியின் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், மற்றும் மன்னார் மறைமாவட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

மேலும் இந்த பேரணிக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.குணசீலன், எஸ்.பிரிமூஸ் சிறாய்வா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

 

இதே வேளை முள்ளிக்குளம் மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம், மன்னார் ஆயர் இல்லத்தினூடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளையால், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினருக்கான வாகன அனுமதி நீக்கம்

wpengine

போராட்டத்துக்கு தயாராகும் துறைமுக ஊழியர்கள்

wpengine

பள்ளிவாசல்களுக்கு வெளியில் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது

wpengine