Breaking
Sun. Dec 10th, 2023
படித்தவர்கள் சம்பளம் போதாது எனக் கூறி, வெளிநாடுகளுக்கு செல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு  தும்முல்ல ஸ்ரீ சம்புத்த ஜயந்தி மாளிகையில் இன்று நடைபெற்ற அரச சேவை பொறியியலாளர்கள் சங்கத்தின் 39வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள படித்தவர்கள், புத்திஜீவிகள் அனைவருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அழைப்பு விடுப்பதாகவும் திடசங்கட்பத்துடன், ஆத்மசுத்தியுடன் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *